மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில்

மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில்

நாட்டின் பல பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும்
என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வட-மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், மொனராகலை மாவட்டத்திலும் இவ்வாறு
மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வெளிப்புற நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் போதுமான அளவு நீர் அருந்துமாறும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share This