விஜய்யின் திருச்சி பிரச்சாரத்தில் போக்குவரத்து நெரிசல் – பொதுமக்கள் சிரமம்

விஜய்யின் திருச்சி பிரச்சாரத்தில் போக்குவரத்து நெரிசல் – பொதுமக்கள் சிரமம்

தவெக தலைவர் விஜய்யின் திருச்சி பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

பொலிஸார் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லையென்றும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சியில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட தவெக தலைவர் விஜய் காலை 9.40 க்கு திருச்சி விமான நிலையம் சென்றார்.

அவரை காண்பதற்காக அவரது இரசிர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் திருச்சி விமான நிலையத்தில் ஒன்று கூடினர்.

விஜயின் வருகையால் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக திருச்சி விமான நிலையத்துக்குள் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஏராளமான பயணிகள் உள்ளேயும், வெளியேவும் செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆளுநர், முதல்வர், பிரதமர் உள்ளிட்ட பிரபலங்கள் வருகை தரும் போது திருச்சி மாநகர பொலிஸ் சார்பில் 1000 க்கும் மேற்பட்ட பொலிஸார்
பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் நிலையில் இன்றைய தினம் 600 பொலிஸார்மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அவர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவோ, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவோ ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் இன்று காலையில் இருந்து மாலை திருச்சி மாநகரத்தின் பிரதான பகுதிகளில் பொது போக்குவரத்துக்கு தடையும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Share This