
யாழில் இளைஞர் மீது வாள்வெட்டு
யாழ்ப்பாணம் nபாலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டி பகுதியில் இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று காலை 10 மணி அளவில் மோட்டார் சைக்கிள் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் மீது ஹயஸ் வாகனத்தில் வந்த இருவர் வாள் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.
சம்பவத்தில் காயம் அடைந்த 35 வயதுடைய யாழ் கொக்குவில் பகுதியை சேர்ந்த இளைஞர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாள் வெட்டு சம்வத்திற்கான காரணம் இரு தரப்புக்கு இடையே காணப்பட்ட முன் பகையே என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
CATEGORIES இலங்கை
