முல்லைத்தீவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டுப் பகுதியில் இன்று மாலை 7 மணி அளவில் இடம்பெற்ற விபத்தில் வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியை குறுக்கறுத்து செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மீது வீதியால் பயணித்த மற்றுமொரு வாகனம் ஏறிச் சென்றதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
புது குடியிருப்பு ஒன்பதாம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சந்திரமோகன் சானுசன் என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த மற்றய நபர் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .