11 ஆவது உலகக் கிண்ண செஸ் தொடர் கோவாவில்

11 ஆவது உலகக் கிண்ண செஸ் தொடர் கோவாவில் நடைபெறும் என சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நவம்பர் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ள தொடருக்கான போட்டி அட்டவணையையும் சர்வதேச செஸ் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.
எட்டுச் சுற்றுகளாக நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்த தொடரில், என்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 206 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் குகேஷ், பிரக்ஞானந்தா உட்பட 20 இந்திய வீரர்கள் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
எனினும், உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான நோர்வேயின் மேக்னஸ் கார்ல்சன் இந்த தொடரில் பங்கேற்பது உறுதியாகவில்லை.
இந்த தொடரில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வீரர்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடருக்கான கேண்டிடேட் தொடருக்கு தகுதி பெறுவர்கள்.
இறுதியாக 2002ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் உலகக் கிண்ண செஸ் தொடர் நடைபெற்றது, இதில் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தார்.
தற்போது 23 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்தியாவில் உலகக் கிண்ண செஸ் தொடர் நடைபெறுவுள்ளமை குறிப்பிடத்தக்கது.