ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஹரின் பெர்னாண்டோ பதுளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை முன்னிலையானதைத் தொடந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பதுளை நீதவான் நுஜித் டி சில்வா வழக்கை ஜனவரி 06 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார்.