ஓய்வை அறிவித்தார் புஜாரா

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்திய வீரர் செதேஷ்வர் புஜாரா ஓய்வு பெறுவதாக, அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் செதேஷ்வர் புஜாரா, 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19 சதங்கள், 35 அரைச்சதங்கள் உட்பட 7,195 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
30 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி 390 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
ஐ.பி.எல் போட்டியில் அதிகபட்சமாக 51 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
இவரது பங்களிப்பு பல போட்டிகளில் இந்திய அணிக்கு இருந்தாலும், சமீபகாலமாக தேசிய அணியில் இடம் பெற முடியாமல் இருந்தார்.
இந்த நிலையில் தற்போது, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்திய வீரர் செதேஷ்வர் புஜாரா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“சர்வதேச போட்டிகளிலிருந்து நான் ஓய்வு பெறுகிறேன், இந்திய அணிக்காக நான் விளையாடிய நாட்களை வார்த்தைகளால் விபரிக்க முடியாது, அனைத்து நல்ல விஷயங்களுக்கும் ஒரு நாள் முடிவு இருக்கும், நன்றி” என தெரிவித்துள்ளார்.