நாட்டில் சில மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

நாட்டில் சில மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

கடந்த அரசாங்கத்தில் முறையான விலைமனுக்கோரல் முறைக்கு வெளியே மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதால், நாட்டில் தற்போது சில மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஆண்டு விலைமனுக்கோரல் இல்லாததன் விளைவாகவே சில மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு விலைமனுக்கோரப்பட்டிருந்தால், மருந்துகள் சரியாக கிடைத்திருக்கும். அடுத்த ஆண்டுக்கு விலைமனுக்கோரப்பட்டுள்ளது.

தற்போதைய மருந்து பற்றாக்குறையை சமாளிக்க, பிராந்திய கொள்முதல்களுக்காக வைத்தியசாலைகளுக்கு 3,500 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளோம்.

மேலும் அவ்வப்போது சில நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மருந்துகளை நன்கொடையாகப் பெறுகிறோம்.

சில நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிலையை அடைந்துவிட்டோம், எனவே இந்தப் பிரச்சினையை நாம் எதிர்கொள்ள முடியும்.” என கூறியுள்ளார்.

Share This