அரசியல் பரபரப்புக்கு மத்தியில் ரணிலின் மனைவியை சந்தித்த மேற்கத்திய இராஜதந்திரி

அரசியல் பரபரப்புக்கு மத்தியில் ரணிலின் மனைவியை சந்தித்த மேற்கத்திய இராஜதந்திரி

மேற்கத்திய நாட்டைச் சேர்ந்த முக்கிய தூதர் ஒருவர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவை சந்தித்ததாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பு ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தில் இடம்பெற்றதாகவும், இந்த சந்திப்பு, சுமூகமானதாகவும், அனுதாபமான முறையிலும் நடந்ததாகவும் வட்டாரங்களால் விவரிக்கப்பட்டது.

கலந்துரையாடலின் விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், இந்த விடயத்தை நன்கு அறிந்த வட்டாரங்கள், தூதரின் இந்த சந்திப்பு மரியாதைக்குரியதாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 முதல் 2024 வரை ஜனாதிபதி பதவியில் இருந்த ரணில் விக்ரமசிங்க,அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பான கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது கணவர் ஜனாதிபதியாக இருந்தபோது முதல் பெண்மணியாக பணியாற்றிய பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க, ரணில் பதவி விலகிய பின்னர் பெரும்பாலும் பொதுமக்களின் பார்வையில் இருந்து விலகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி ரணிலின் கைது சுயாதீனமான நீதித்துறை செயல்முறைகளின் விளைவாகும் என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

எனினும், ஆளும் நிர்வாகம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This