
ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் பழிவாங்கல் – மஹிந்த
அரசியல் தலைவர்களை சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைப்பது வருத்தம் அளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
மக்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நன்கு புரிந்து கொண்டுள்ளனர்எ, இதுபோன்ற செயல்கள் அரசியல் பழிவாங்கல்.
மக்கள் இன்னும் தன்னை நேசிக்கிறார்கள் . நாங்கள் மக்களை நேசிக்கிறோம். அதனால்தான் மக்கள் எங்களை நேசிக்கிறார்கள்” என்றார்.
CATEGORIES இலங்கை
