காசா நகரில் முதன் முறையாக பஞ்சம் உறுதியானது

காசா நகரில் முதன் முறையாக பஞ்சம் உறுதியானது

காசா நகரில் முதன்முறையாக பஞ்சம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பைக் கண்காணிக்கும் பொறுப்புள்ள ஐ.நா. ஆதரவு பெற்ற அமைப்பு இதனை அறிவித்துள்ளது.

சுமார் அரை மில்லியனுக்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் பட்டினி, வறுமை மற்றும் உயிரிழப்பு உள்ளிட்ட பேரழிவு
தரும் பஞ்ச நிலைமைகளை எதிர்கொள்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா முழுவதும் இன்று அதிகாலை 30 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மிகவும் கடுமையான குண்டுவெடிப்புகள் இடம்பெறும் காசா நகரில் மாத்திரம் 25 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This