2025 அசிதிசி வெகுசன ஊடக புலமைப் பரிசில்

தொழில்முறை வெகுஜன ஊடகத் துறையை நிறுவுவதற்காக அனைத்து வெகுஜன ஊடகவியலாளர்களையும் அறிவு, திறன்கள் மற்றும் அணுகுமுறையுடன் தயார்படுத்தும் நோக்கில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் ஊடகப் பிரிவால் ஆண்டுதோறும் செயல்படுத்தப்படும் அசிதிசி வெகுசன ஊடக புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் வெகுஜன ஊடகவியலாளர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் ஆரம்பமாகவுள்ளது.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்கவின் பங்கேற்புடன் நாளை மறுதினம் (22.08) பிற்பகல் 03.00 மணிக்கு பொல்ஹெங்கொடவில் உள்ள சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் ஊடகப் பிரிவு கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு நடைபெறும்.
இருபத்தியோராம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள வெகுஜன ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் மூலம் பத்திரிகையாளர்கள் தங்கள் தொழில்முறை திறன்களை வளர்த்துக் கொள்ள வாய்ப்புகளை வழங்குவதும் ஊக்குவிப்பதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களில் 03 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்து, முழு நேர அல்லது பகுதி நேர அடிப்படையில் சேவையில் ஈடுபட்டுள்ள 18 முதல் 55 வயதுக்குட்பட்ட அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெகுஜன ஊடகவியலாளர்களுக்காக வழங்கப்படுகின்ற ஊடவியலாளர் அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்ட ஊடகவியலாளர்கள், சுதந்திர ஊடகவியலாளர்கள், பிரதேச ஊடகவியலாளரகள், இணையத்தள ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக தொழில்நுட்ப கலைஞர்களுக்கு மீளவும் திருப்பிச் செலுத்த முடியாத அடிப்படையில் இந்தப் புலமைப்பரிசில் வழங்கப்படும்.
இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு அதிகபட்சமாக இரண்டு லட்சம் ரூபாய் (200,000.00) வரையும், குறுகிய கால அல்லது நீண்ட கால சான்றிதழ் படிப்புகள், டிப்ளோமாக்கள் மற்றும் உயர் டிப்ளோமாக்களுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் (100,000.00) வரையும் இந்தப் புலமைப்பரிசில் தொகை வழங்கப்படுகிறது.
புலமைப்பரிசில் பெறுபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி பயிற்சி நிறுவனங்களால் நடத்தப்படும் ஊடகத் துறை தொடர்பான பாடநெறிகளைத் தொடர வேண்டும்.
எவ்விதத் கட்டணமும் மீளவும் பெற்றுக் கொள்ளாமல் அரசினால் அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படும் இந்த புலமைப்பரிசில் திட்டம், ஊடகவியலாளர்களுக்கு இரண்டு முறை சலுகைகளைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது, மேலும் முதல் கட்டத்தில் 05 ஆண்டுகள் தகுதி பெற்ற பின்னர் முதல் பாடத்தை வெற்றிகரமாக முடித்த வெகுஜன ஊடகவியலாளர்கள் இரண்டாவது வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
உதவித்தொகை பெற தகுதியுள்ள ஊடகவியலாளர்களுக்கு பாடநெறியின் தொடக்கத்தில் முதல் தவணையாக பாடநெறி கட்டணத்தில் 50% வழங்கப்படும்% மீதமுள்ள 50% இல் 25% பாடநெறியின் இரண்டாம் தவணையாகவும், மீதமுள்ள 25% பாடநெறியை முடித்து சான்றிதழ்களைச் சமர்ப்பித்த பிறகும் வழங்கப்படும்.
வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழு விண்ணப்பதாரர்களை நேர்காணல் செய்து புலமைப் பரிசில் பெறுனர்களை தெரிவு செய்வார்கள்.