பிரதான மாரக்கத்திலான ரயில் சேவைகள் தாமதம்

பிரதான மாரக்கம் மற்றும் கரையோர மார்க்கத்திலான ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.
காலியில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலே தடம் புரண்டுள்ளது.