
தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு கோரி கந்தப்பளையில் போராட்டம்
அரசாங்கத்துக்கு எதிராக சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பினர் கந்தபளை நகரில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
இந்த போராட்டம் நேற்று மாலை 05 மணியளவில் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பதாதைகள் மற்றும் தீப்பந்தங்களை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது பொருட்களின் விலைகளை குறைக்குமாறும் தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறும் போரட்டக்காரர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
மின்சாரக் கட்டணத்தை குறைக்குமாறும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

CATEGORIES இலங்கை
