துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உப்பு கொள்கலன்களை மீள ஏற்றுமதி செய்ய நடவடிக்கை

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 400 உப்பு கொள்கலன்களை மீள ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென இலங்கை சுங்கம் தெரிவிக்கின்றது.
உப்பு இறக்குமதிக்கு அரசாங்கம் வழங்கிய கால அவகாசத்திற்கு பின்னர் இந்த உப்பு கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டதால் அது தடுத்துவைக்கப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.
உப்பு இறக்குமதிக்கு கடந்த ஜுன் மாதம் 10ஆம் திகதி வரை அரசாங்கம் காலஅவகாசம் வழங்கியிருந்தது.
இறக்குமதியாளர்கள் தாமதக் கட்டணத்தை செலுத்தி கொள்கலன்களை தொடர்ந்தும் துறைமுகத்தில் வைத்திருப்பதாகவும் சுங்கம் மேலும் தெரிவித்துள்ளது.