ஏற்றுமதி வருவாயை அதிகரிக்கும் இலக்கை அடைவதற்கான சவால்கள் குறித்து கலந்துரையாடல்

ஏற்றுமதி வருவாயை அதிகரிக்கும் இலக்கை அடைவதற்கான சவால்கள் குறித்து கலந்துரையாடல்

2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் ஏற்றுமதி வருவாயை 36 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும் அரசாங்கத்தின் இலக்கை அடைவதற்கான சவால்கள் மற்றும் சாத்தியமான தீர்வுகள் குறித்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது.

ஏற்றுமதி மேம்பாட்டு அமைச்சரவையின் இரண்டாவது கலந்துரையாடல் நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த அமர்வின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு, தொடர்புடைய திட்டங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டன.

ஏற்றுமதித் துறையின் வளர்ச்சி தொடர்பான பல அத்தியாவசிய பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியின் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இரத்தினக்கல் மற்றும் நகைத் துறையின் வளர்ச்சி, சுங்க நடவடிக்கைகளை மிகவும் திறம்படச் செய்ய புதிய ஸ்கேனர் நிறுவுதல், மருந்து ஏற்றுமதித் தொழில், தேயிலை ஏற்றுமதி மேம்பாடு, புதிய கட்டண ஒப்பந்தங்கள்; குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, கிராமப்புற மேம்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுப், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகோந்தா, கைத்தொழில் அமைச்சின் செயலாளர் திலகா ஜெயசுந்தர மற்றும் பிற தொடர்புடைய அமைச்சு செயலாளர்கள், இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் அர்ஜுன ஹெராத், இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க, இலங்கை துறைமுக அதிகாரசபை, இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு சபை மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் மூத்த அதிகாரிகள் இதன்போது கலந்து கொண்டனர்.

Share This