காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் அல் ஜசீராவின் ஐந்து ஊடகவியலாளர்கள் பலி

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் அல் ஜசீராவின் ஐந்து ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போதே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
தாக்குதலின் போது அவர்கள் மருத்துவமனையின் பிரதான வாயிலில் ஊடகவியலாளர்களுக்காக அமைக்கப்பட்ட இடத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலை அல் ஜசீரா செய்தி சேவை வன்மையாகக் கண்டித்துள்ளது.
இந்த தாக்குதல் இலக்கு வைக்கப்பட்ட படுகொலை என்றும் பத்திரிகை சுதந்திரத்தின் மீதான மற்றொரு திட்டமிடப்பட்ட தாக்குதல் என்றும் அல் ஜசீரா கண்டித்துள்ளது.
அனஸ் அல்-ஷெரிப் என்பவர் மீது இலக்கு வைக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
அவர் ஹமாஸில் பயங்கரவாத பிரிவின் தலைவராக பணியாற்றியவர் என்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.