பொரளை துப்பாக்கி பிரயோகம் – மற்றுமொருவர் உயிரிழப்பு

பொரளை துப்பாக்கி பிரயோகம் – மற்றுமொருவர் உயிரிழப்பு

பொரளையில் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி சிகிச்சைப் பெற்றுவந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில்  மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 7 ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் மூவர் உயிரிழந்ததுடன் தொடர்ந்தும் இருவர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

துப்பாக்கி பிரயோகத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் முன்னதாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் மூன்று நாள் தடுப்புக் காவலில் விசாரிக்கப்படுகிறார்.

இந்நிலையில் தற்போது கைதானவர்கள் பொரளை மற்றும் தெமட்டகொடவைச் சேர்ந்த 24, 25 மற்றும் 40 வயதானவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக சுமார் 10 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Share This