நிதி மோசடி தொடர்பாக கைதான களுத்துறை பிரதேச சபை அதிகாரி மற்றும் சாரதிக்கு விளக்கமறியல்

நிதி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட களுத்துறை பிரதேச சபை அதிகாரி மற்றும் சாரதி ஆகியோர் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை பிரதேச சபை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும்போது பத்து மில்லியன் ரூபாய்க்கு மேல் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்..
கைது செய்யப்பட்ட நபர்கள் களுத்துறையின் போம்புவல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் என்பதுடன் மற்றொருவர் வாதுவ பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய சாரதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை பிரதேச சபை அதிகாரி ஒருவர் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து நீண்ட விசாரணைகளின் பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.