உயர்தர மாணவர்களுக்கான கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

2025 ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, ஒகஸ்ட் 12 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.
2024 ஆம் ஆண்டு மீள் மதிப்பீட்டு பெறுபேறுகளின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், மற்றும் 2025 ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு குறிப்பிட்ட காலத்தில் விண்ணப்பிக்க முடியாதவர்களுக்கு இந்த நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் எந்தவொரு காரணத்திற்காகவும் மீண்டும் காலம் நீட்டிக்கப்படாது என கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.