பொரளை துப்பாக்கி பிரயோகம் – மேலும் ஒருவர் பலி

பொரளை துப்பாக்கி பிரயோகம் – மேலும் ஒருவர் பலி

பொரளை, சஹஸ்புர பகுதியில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கி பிரயோகம் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது காயமடைந்த ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இந்நிலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான மற்றுமொருவர் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

மேலும் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

 

Share This