காசா நகரைக் கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்

காசா நகரைக் கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்

காசா நகரத்தை முழுமையாக இராணுவக் கட்டுப்பாட்டில் எடுக்கும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை இரவு வரை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னர் நெதன்யாகு காசாவை முழுமையாக இராணுவ ஆக்கிரமிப்பதற்கான தனது விருப்பத்தை தெளிவுபடுத்திய பின்னர் அந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த அனுமதி இஸ்ரேலின் உயர்மட்ட ஜெனரலின் தயக்கங்களை பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸால் பிடிக்கப்பட்ட மீதமுள்ள 20 அல்லது அதற்கு மேற்பட்ட உயிருள்ள பணயக்கைதிகளை ஆபத்தில் ஆழ்த்தும் என்றும், சுமார் இரண்டு ஆண்டுகால பிராந்தியப் போர்களுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவத்தை மேலும் கஷ்டப்படுத்தும் என்றும் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

இஸ்ரேலிய கட்டுப்பாட்டில் இல்லாத காசா பிரதேசத்தை முழுவதுமாகவோ அல்லது பகுதிகளையோ கைப்பற்றுவதற்கான திட்டங்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சரவை விவாதிக்கும் என்று இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் முன்னதாக கூறியிருந்தார்.

முறையான முடிவு வரும் வரை பெயர் வெளியிட விரும்பாத நிலையில் பேசிய அந்த அதிகாரி, ஹமாஸ் மீது அழுத்தத்தை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்ட அனைத்தும் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்று கூறினார்.

கூட்டத்திற்கு முன்னதாக ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், இஸ்ரேல் “முழு காசாவையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளுமா” என்று கேட்டதற்கு,”எங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஹமாஸை அங்கிருந்து அகற்றி, மக்கள் காசாவிலிருந்து விடுபட உதவும் வகையில் நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்று நெதன்யாகு கூறினார்: ”

இதேவேளை, இஸ்ரேல் ஏற்கனவே காசாவின் 75% பகுதியைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது மற்றும் அதன் எல்லைகளை பெருமளவில் மூடிவிட்டுள்ளது.

முழு கட்டுப்பாட்டையும் எடுக்க, மீதமுள்ள பகுதிகளில் தரைவழி நடவடிக்கைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் ‘பணயக்கைதிகளையும் வீரர்களையும் ஆபத்தில் ஆழ்த்தும்’

காசாவை முழுமையாகக் கைப்பற்றும் திட்டம், ஹமாஸால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளின் குடும்பங்கள் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) உயர் அதிகாரி உட்பட பலரால் விமர்சிக்கப்பட்டுள்ளது.

 

Share This