பாஜக தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலும் அழித்துவிட்டது – ராகுல் காந்தி

பாஜக தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலும் அழித்துவிட்டது – ராகுல் காந்தி

இந்தியப் பொருளாதாரம் இறந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதபிதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்த நிலையில் அந்த கூற்று உண்மையென மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான குறிப்பிட்ட காலவகாசத்துக்குள் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாததை தொடர்ந்து இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
மேலும், ரஷ்யாவிடமிருந்து இராணுவ தளவாடங்கள், மசகு எண்ணெய் கொள்வனவு செய்தால் அபராதமும் விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.

ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு குறித்து தனக்கு கவலை
இல்லையெனவும் அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா விதிக்கும் வரிகள் உலகிலேயே மிக அதிகமானது எனவும் ட்ரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

அதன்காரணமாகவே அவர்களுடன் ஒப்பீட்டளவில் குறைந்தளவான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாஜக தலைமையிலான மத்திய அரசு நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை முற்றிலும் அழித்துவிட்டது எனவும் இந்த உண்மையை ட்ரம்ப் கூறியதில் எனக்கு மகிழ்ச்சி எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தொழிலதிபர் கௌதம்  அதானிக்கு உதவுவதற்காக பாஜக இந்திய பொருளாதாரத்தையே அழித்துவிட்டது என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

 

Share This