அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை எட்டியது

உலகின் இரண்டு முக்கிய பொருளாதார சக்திகளான அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (ருசளரடய ஏழn னநச டுநலநn) இடையே ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 15வீத வரி விதிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.
டிரம்ப் அரசாங்கம் ஆரம்பத்தில் ஐரோப்பிய ஒன்றியப் பொருட்களுக்கு 30 வீத இறக்குமதி வரி விதிக்க திட்மிட்டிருந்த நிலையில் தற்போது 15 வீதம் குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியமும் சில அமெரிக்க பொருட்களுக்கு வரி விலக்களிப்பதன் மூலம் தனது சந்தையை திறந்துள்ளது.
இந்த நடவடிக்கை பொருளாதார நம்பிக்கையை ஏற்படுத்துவதுடன், உலக வர்த்தகத்திலும் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.