வெலிக்கடை சிறைச்சாலையில் கண்டுப்பிடிக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள்

வெலிக்கடை சிறைச்சாலையில் கண்டுப்பிடிக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள்

வெலிக்கடை சிறைச்சாலையின் ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலை அவசரகால பதிலளிப்பு குழுவினரால் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் ஆறு கையடக்கத் தொலைபேசிகளுக்கு மேலதிகமாக, சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையின் ‘கே’ பிரிவில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பல முன்னாள் அமைச்சர்கள் அந்த சிறையில் உள்ள கைதிகளில் அடங்குவதாகக் கூறப்படுகிறது.

மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ, எம்.எஸ். ரஞ்சித் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட கைதிகள் அந்த சிறைச்சாலை வார்டில் தங்கியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This