
எம்.பி அர்ச்சுனா மற்றும் சட்டத்தரணி கௌசல்யாவுக்கு பிணை
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும், சட்டத்தரணி கௌசல்யாவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள், கடந்த 09.12.2024 அன்று அத்துமீறி உள் நுழைந்த வழக்கு இன்றைய தினம் யாழ் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா மற்றும் சட்டத்தரணி கௌசல்யா ஆகிய இருவரையும் பிணையில் செல்ல யாழ்ப்பாணம் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதோ நீதிமன்றம் பிணை வழங்கியது.
மேலும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கலாநிதி த.சத்தியமூர்த்தியால் இந்த வழக்கு தாக்கு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
TAGS CourtJaffnaRamanathan ArchchunaTeaching Hospital Jaffnaஇராமநாதன் அர்ச்சுனாயாழ் நீதிமன்றம்வைத்தியர் த.சத்தியமூர்த்தி
