
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு – மேன்முறையீட்டு கால அவகாசம் இன்றுடன் நிறைவு
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்திற்காக மேன்முறையீடு செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் (21) நிறைவடையவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
தற்போது இரண்டாம் கட்டத்தின் கீழ் அஸ்வெசும பயனாளர்களிடமிருந்து சுமார் 30,000 மேன்முறையீடுகள் கிடைக்கப்பபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மேன்முறையீடுகள் பிரதேச செயலகங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மேன்முறையீட்டு குழுவினூடாக நாளை (22) மீளாய்வு செய்யப்படும் என நலன்புரி நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.
CATEGORIES இலங்கை
