ரஃபாவில் உணவு உதவி மையங்களுக்கு அருகில் இஸ்ரேல் தாக்குதல் – 50 பேர் உயிரிழப்பு

காசாக்கரையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பலஸ்தீனிய நகரமான ரஃபாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 50 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
உணவு உதவி மையங்களுக்கு அருகில் இன்று சனிக்கிழமை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
காசாவில் ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் பட்டினியில் இருப்பதாக உலக உணவுத் திட்டம் (WFP) தெரிவித்துள்ளது,
மேலும் அந்த பகுதியில் உள்ள மூன்றில் ஒருவர் பல நாட்கள் உணவில்லாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியா ஜனாதிபதி சுவைதா மாகாணத்தில் “உடனடி போர்நிறுத்தத்தை” அறிவிக்கிறார்.
காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீதமுள்ள அனைத்து கைதிகளையும் விடுவிக்கும் ஒரு போர்நிறுத்த திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்ததாகவும்,
எந்த ஒப்பந்தமும் இல்லாவிட்டால் நீண்ட போருக்குத் தயாராக இருப்பதாகவும் ஹமாஸ் கூறியது.
இஸ்ரேல் –ஹமாஸ் மோதல் காரணமாக இதுவரை 58,667 பேர் உயிரிழந்துள்ளதுடன் 139,974 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.