பிரித்தானியாவின் எசெக்ஸ் நகரில் பரபரப்பு – 14 வயது சிறுமி மீதான வன்முறைக்குப் பிறகு மக்கள் போராட்டம்

இங்கிலாந்தின் எசெக்ஸ் மாவட்டத்தில் உள்ள எப்பிங் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
அங்கு உள்ள ஒரு ஹோட்டலில் புகலிடம் கோரியவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த ஹோட்டலை சுற்றி ஒரு குழு மக்கள் கூடி போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்துக்கான காரணம் — அங்கு தங்கவைக்கப்பட்ட ஒரு அகதியால், 14 வயது பள்ளி மாணவியர் பாலியல் வன்முறைக்கு உள்ளானதாக போலீசாரால் குற்றம் சுமத்தப்பட்ட சம்பவம்.
இந்த விவகாரம் வெளியான பிறகு, மக்கள் அதே ஹோட்டலுக்கு சென்று குரல் கொடுத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
போராட்டம் மிகுந்த பதற்றத்தில் மாறியது. சிலர் போலீஸ் வாகனங்களை சுற்றிவளைத்து, பொருட்களை வீசினர். ஒருவர் வாகனத்தின் மீது ஏறி கைகளை உயர்த்தி போராட்டம் நடத்தினார்.
போராட்டத்துக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். மேலும் பல சந்தேக நபர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக, அந்த இடம் முழுவதும் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.