பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கபட்ட சம்பவம் – வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை கடத்திச் சென்று காணாமலாக்கியது தொடர்பில் ஒன்பது இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (18) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிபதிகளான நாமல் பலல்லே, மகேஷ் வீரமன் மற்றும் சுஜீவ நிஸ்ஸங்க ஆகிய மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற குழாம் முன்னிலையில் தொடர்புடைய வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது, அரச தரப்பு சாட்சியிடமிருந்து சாட்சியம் பதிவு செய்யப்பட்ட பின்னர், மேலதிக விசாரணைக்காக ஒகஸ்ட் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.