பண்டாரவளை வனப்பகுதியில் காட்டுத் தீ பரவல் – 15 ஏக்கர் நிலப்பரப்பு சேதம்

பண்டாரவளை வனப்பகுதியில் காட்டுத் தீ பரவல் – 15 ஏக்கர் நிலப்பரப்பு சேதம்

பண்டாரவளை அத்தலப்பிட்டிய வனப்பாதுகாப்புப் பிரிவின் உடுகும்பல்வெல சரணாலயத்திற்கு அருகிலுள்ள மலைப்பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (18) தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயை இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாததால் தியத்தலாவ இராணுவத்தினர் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

வனவிலங்கு சரணாலயத்திற்குள் தீ பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக, வன பாதுகாப்பு அதிகாரிகள் தீ தடுப்பு வேலிகளை வெட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பு தீயால் சேதமடைந்துள்ளதுடன் பலத்த காற்று, வறண்ட நிலை மற்றும் செங்குத்தான சரிவுகள் காரணமாக தீயை கட்டுப்படுத்துவது சிரமமாக
இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

CATEGORIES
TAGS
Share This