பாரதிய அந்த ரிக்ஷா ஸ்டேஷன் – 2035 இற்குள் விண்ணில் நிறுவப்படும்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, எதிர்கால தேவையைக் கருத்தில்கொண்டு சந்திராயன் – 4, சுகன்யான் உட்பட பல ஆய்வுத் திட்டங்களில் முனைப்பு காட்டி வருகிறது.
மேலும் பாரதிய அந்த ரிக்ஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு விண்வெளி மையத்தை எதிர்வரும் 2035 ஆம் வருடத்துக்குள் விண்ணில் நிறுவவும் இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஸ்பேஸ் எக்ஸ் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இத் திட்டத்தின் கீழ், விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வுப் பணிகள் நடக்கவுள்ளன.
இதற்காக சுமார் 400 கிலோ எடைகொண்ட சேசர் மற்றும் டார்கெட் எனும் இரண்டு விண்கலன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த விண்கலன்கள் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள ஏவுதளத்திலிருந்து இம் மாத இறுதியில் விண்ணில் ஏவப்படவுள்ளது.
பூமியிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர் தூரத்தில் வெவ்வேறு சுற்றுப் பாதைகளில் நிலை நிறுத்தப்படவுள்ளன.
அதன் பின்னர் அவற்றை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.