கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு அப்பகுதியிலுள்ள 29 பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறைக்காக ஜூலை 29 ஆம் திகதி முதல்  ஒகஸ்ட்  04 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக கண்டி வலய கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.

கண்டியில் வருடாந்திர எசல பெரஹெராவின் போது எதிர்பார்க்கப்படும் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து சவால்கள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையின் மிக முக்கியமான கலாசார மற்றும் மத விழாக்களில் ஒன்றான எசல பெரஹெரா ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெறவுள்ளது.

இதன்படி, ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் பாதுகாப்புப் பணியாளர்களுக்கான தங்குமிடமாகப் பயன்படுத்தப்படும் என்றும் வலயக் கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ள விசேட சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதனால் விடுமுறை வழங்கப்பட்டுள்ள பாடசாலை நாட்களுக்குப் பதிலாக வேறு நாட்களில் பாடசாலையை நடத்துவது தொடர்பான யோசனையை சமர்ப்பிக்குமாறும் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஓகஸ்ட் 5, 6 மற்றும் 7 ஆகிய திகதிகளை உள்ளடக்கியதாக பாடசாலை விடுமுறையை நீடிப்பது அவசியமா என்பதை தெளிவுபடுத்துமாறும் அதிபர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை கண்டி கல்வி வலயத்துக்குட்பட்ட அரச மற்றும் அரச உதவியின் கீழ் இயங்கும் சிங்கள் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 17 வரையும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 24 வரை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share This