விமான நிலையத்தில் 31 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்

விமான நிலையத்தில் 31 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்

தாய்லாந்து – பேங்கொக் நகரிலிருந்து இந்தியா வழியாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 31 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளை விமான நிலைய சுங்கப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த போதைப்பொருள்  சுமார் 03 கிலோகிராம் 117 கிராம் நிறையுடையது என சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த குஷ் போதைப்பொருள் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய மரக்கறி வியாபாரி ஒருவரால் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் போதைப்பொருள் கையிருப்பை 20 பெட்டிகளில் சூட்சுமமான முறையில் பொதியிட்டு கொண்டு வந்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

Share This