புத்தளத்தில் உப்பு உற்பத்தியில் பாதிப்பு

புத்தளத்தில் உப்பு உற்பத்தியில் பாதிப்பு

நாடளாவிய ரீதியில் நிலவி வரும் பலத்த மழை காரணமாக புத்தளத்தில் உப்பு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

புத்தளத்தில் காணப்படும் உப்பளமானது அண்மைக்காலம் வரையில் நாட்டின் மொத்த உற்பத்தி பங்களிப்பில் 45 வீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கி வருகிறது.

புத்தளம் மாவட்டத்தின் புத்தளம், கல்பிட்டி, வனாத்தவில்லு, முந்தலம் ஆகிய பிரதேச செயலகப் பகுதிகளில் சுமார் 4000 ஹெக்டேயர் பரப்பளவில் 2,000க்கும் மேற்பட்டோர் உப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, இத்தொழில் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 20,000ஐத் தாண்டியுள்ளது.

இலங்கையின் உப்பு நுகர்வு ஒரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் மெட்றிக் டொன் ஆகும்.

அதில் புத்தளம் மாவட்டத்தில் இருந்து கடந்த வருடங்களில் 46,000 மெட்றிக் டொன் உற்பத்தி கிடைத்துள்ளன.

எனினும், இந்த நிலை 2023ஆம் ஆண்டுக்கு பின்னர் 40 வீதத்துக்கும் குறைவாகவே காணப்படுகிறது.

Share This