மேலாடையின்றி பயணம் செய்த வெளிநாட்டுப் பெண் கைது

சாலையில் மேலாடையின்றி நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவரை பொத்துவில் பொலிஸ் நிலைய மகளிர் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்த வெளிநாட்டுப் பெண் ஒரு ஹோட்டலில் இருந்து மற்றொரு ஹோட்டலின் நுழைவாயில் வரை மேலாடையின்றி நடந்து சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பின்னர், பொத்துவில் பொலிஸ் நிலையத்தின் பெண் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் குழு சென்று அந்தப் பெண்ணைக் கைது செய்து பொத்துவில் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட பெண் இன்று (15) பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.