அமெரிக்காவின் அரசியல் பழிவாங்கலில் சிக்கி கொள்ளுமா கனடா?

அமெரிக்க இராணுவ உபகரணங்களைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்க ஐரோப்பாவிலிருந்து போர் விமானங்கள் உட்பட அதிகளவான பாதுகாப்பு உபகரணங்களை கொள்வனவு செய்யும் கனடாவின் இலட்சிய உத்தி, மிகவும் கடினமானதாகவும் அரசியல் ரீதியாக பாரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா இடையே புதிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கூட்டுறவு ஒப்பந்தம் கடந்த ஜூன் மாதம் கையெழுத்தானது.
இருநாடுகளும் தங்களுடைய மூன்றாவது இருதரப்பு உச்சிமாநாட்டின் போது, பாதுகாப்பு, தொழிற்றுறை மற்றும் டிஜிட்டல் வர்த்தகத்தில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு ஒரு புதிய துவகத்திற்கு வித்திட்டனர்.
இது, SAFE instrument மூலம் கனடாவும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து பாதுகாப்பு பெறும் நடவடிக்கையில் பங்கேற்க அனுமதிக்கிறது.
அத்துடன், கனடாவின் பாதுகாப்பு தொழிற்றுறையும் எதிர்காலத்தில் இணையும் வகையில் புதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
உக்ரைனுக்கு தொடர்ந்தும் ஆதரவு, ரஷ்யாவுக்கு எதிரான அழுத்தங்கள், மொல்டோவாவை பாதுகாப்பது போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
காசா பகுதியில் தாக்குதலும், இஸ்ரேல்-ஈரான் இடையிலான பதற்றம் அதிகரிக்கக்கூடாது என்பதும் இங்கு வலியுறுத்தப்பட்டிருந்ததது.
இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் வெற்றியை இருநாடுகளும் கொண்டாடின. இது மூலப்பொருட்கள் மற்றும் தொழிற்றுறையில் கூட்டு திட்டங்களை உருவாக்க வழிவகுக்கிறது.
மேலும், Digital Trade Agreement மற்றும் AI-யில் ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தைகளும் ஆரம்பமாகவுள்ளன.
ஆனால் இந்த பாதுகாப்பு கூட்டுறவு ஒப்பந்தத்தின் அரசியல் மற்றும் நிதி அபாயங்களை மதிப்பிட்ட பின்னர் அட்லாண்டிக் பெருங்கடலின் இருபுறமும் உள்ள தடைகள் காரணமாக முழு பலனையும் அடைவது சாத்தியமில்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதாவது அமெரிக்காவுடனான வர்த்தக பதற்றங்கள், ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான பிளவு, கூட்டாட்சி மற்றும் மாகாண அரசாங்கங்களுக்கு இடையிலான பலவீனமான தொடர்புகளை ஆய்வாளர்கள் மேற்கோள் காட்டுகின்றனர்.
தற்போது, கனேடிய இராணுவம் பயன்படுத்தும் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களில் சுமார் 75 சதவீதத்தை அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன, இது கனடாவை அமெரிக்க கொள்கைகள் மற்றும் வர்த்தக பதற்றங்களை மாற்றுவதற்கு ஆளாக்குகிறது என அறிக்கை கூறுகிறது.
ஐரோப்பாவிலிருந்து அதிகமாக இராணுவ பொருட்களை பெறுவது கனேடியே பொருளாதாரத்திற்கு மிகவும் சிறந்த ஒன்றாக அமையும் என்ற போதிலும் கனடா அமெரிக்காவின் அரசியல் பழிவாங்களை சந்திக்க நேரிடும் என பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.