கனடாவில் காற்றின் தரம் தொடர்பில் எச்சரிக்கை

கனடாவில் காற்றின் தரம் தொடர்பில் எச்சரிக்கை

கனடாவில் மனிடோபா, வடமேற்கு பிரதேசங்கள், ஒன்டாரியோ மற்றும் சஸ்காட்சுவான் ஆகிய பகுதிகளுக்கு காற்றின் தரம் தொடர்பிலும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

65 வயதுக்கு மேற்பட்ட மனிடோபா குடியிருப்பாளர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் காட்டுத்தீ புகை காரணமாக வெளியில் இருப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

காட்டுத்தீ புகை காரணமாக காற்றின் தரம் மோசமடைவதால் வயது வித்தியாசமின்றி அனைவரின் உடல்நலமும் ஆபத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலைமை வார இறுதி முழுவதும் நீடிக்கக்கூடும் என்பதால் குடியிருப்பாளர்கள் கண், மூக்கு மற்றும் தொண்டை எரிச்சல் அல்லது தலைவலி போன்றவற்றை
எதிர்கொள்ள நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.

மூச்சுத்திணறல், மார்பு வலி அல்லது கடுமையான இருமல் ஏற்பட்டால் வைத்தியசாலைக்கு செல்லுமாறும் மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

Share This