புதிய சபாநாயகர் தெரிவுக்கு எதிர்கட்சியும் பரிந்துரை

புதிய சபாநாயகர் தெரிவுக்கு எதிர்கட்சியும் பரிந்துரை

கடந்த வாரம் அசோக ரன்வல சபாநாயகர் பதவியிலிருந்து விலகிய நிலையில் பதவி வெற்றிடத்திற்கு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரை பரிந்துரைக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் செவ்வாய்யக்கிழமை நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ள நிலையில், முதலாவது நிகழ்வாக புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது.

இதன்போது சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை பரிந்துரைக்கவுள்ளோம்.

எதிர்கட்சியிலிருந்து ஒருவரை தெரிவு செய்யமுடியாது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனாலும் வேட்பாளர்களை ஒப்பிடும் சூழ்நிலையை மக்களுக்கு உருவாக்குவோம் என்று நம்புகிறோம்.

நவம்பர் மாதம் 21 ஆம் திகதி நாங்கள் அந்தப் பதவிக்கு போட்டியிட்டிருந்தால், பொய்யாக கலாநிதி பட்டம் பெற்ற ரன்வலவை விட எதிர்க்கட்சி வேட்பாளர் சிறந்தவராக இருந்திருப்பார் என்று மக்கள் கூறியிருப்பார்கள்” என்றார்.

 

 

Share This