உழவு இயந்திரத்துடன் மோதி விபத்து ஒரு பிள்ளையின் தந்தை மரணம்!!

உழவு இயந்திரத்துடன் மோதி விபத்து ஒரு பிள்ளையின் தந்தை மரணம்!!

திருகோணமலை, கோமரங்கடவல-புலிக்கண்டி குளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோதி ஒரு பிள்ளையின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்றிரவு (09) இடம்பெற்றுள்ளது. புலிக்கண்டிகுளம் சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோதியதினாலேயே இவ்விபத்து இடம்பெற்றதாகவும் தெரிய வருகின்றது.

இவ்விபத்தில் கோமரங்கடவல- பக்மீகம பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பிலான விசாரணைகளை கோமரங்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This