தாய்லாந்தில் வெடிகுண்டுத் தாக்குதல் – மூவர் பலி

தாய்லாந்தில் வெடிகுண்டுத் தாக்குதல் – மூவர் பலி

தாய்லாந்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் மக்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் சுமார் மூவர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு தக் மாகாணத்தில் உள்ள உம்பாங் மாவட்டத்தில் வருடந்தோறும் நடைபெறும் கண்காட்சி நிகழ்வொன்றில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

சம்பவத்தில் சுமார் 48 பேர் காயமடைந்துள்ளதுடன் அறுவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா தனது இரங்கலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Share This