சஞ்சு சாம்சன் மட்டும் இல்லை… 35 வயது வீரரையும் வாங்கும் சென்னை அணி?

சஞ்சு சாம்சன் மட்டும் இல்லை… 35 வயது வீரரையும் வாங்கும் சென்னை அணி?

ஐபிஎல் 2025 சீசன் முடிவடைந்தாலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் டிரேடிங் செயல்முறைகள் தான் தற்போது அதிக கவனம் பெறுகின்றன. ஏனெனில், இந்த டிரேடிங் முறையின் மூலம் அணிகள், எதிர்கால சீசனுக்கான தங்களின் பிளேயிங் லெவனை வலுப்படுத்த திட்டமிடுகின்றன.

அந்தவகையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸை சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) தங்கள் அணிக்குள் கொண்டுவர முயற்சி செய்து வருவதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 35 வயது ஸ்டோய்னிஸின் ஆட்டத்திறமை மீது சென்னை அணி உயர்ந்த நம்பிக்கையுடன் உள்ளது.

2025 ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயாண்ட்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்டோய்னிஸ், சென்னைக்கு எதிரான போட்டியில் சென்னையின் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் சதம் விளாசியதும், அந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்ததும் இன்னும் ரசிகர்கள் நினைவில் உள்ளது.

அதன் பின் அவரைத் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்க விருப்பமாக இருந்ததாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

துடுப்பாட்டத்தில் மட்டுமல்லாமல், பந்துவீச்சிலும் திறமையுடன் செயல்படக்கூடிய ஸ்டோய்னிஸை டிரேடிங் முறையில் கைப்பற்றுவதற்கு சென்னை அணி தீவிரமாக முனைந்துள்ளது.

இதற்காக பஞ்சாப் அணியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் நாதன் எல்லிஸை பஞ்சாப் கேட்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

ஏற்கனவே எல்லிஸ், பஞ்சாப் அணிக்காக விளையாடிய அனுபவம் உள்ளவர் என்பதால், இந்த பரிமாற்றம் விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ராஜஸ்தான் அணியின் அணியின் சஞ்சு சாம்சன், குஜராத் அணியின் வாஷிங்டன் சுந்தர் மற்றும் பினிஷர் ராகுல் தெவட்டியாவையும் சென்னை அணி இலக்காகக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது சென்னை அணி தங்கள் அடுத்த சீசனுக்கான அணியை மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் உருவாக்கிக்கொண்டு இருப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

மொத்தத்தில், 2026 சீசனுக்கு முன்பே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வலுவூட்டும் நடவடிக்கைகள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

 

Share This