சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 300 இற்கும் மேற்பட்டோர் கைது

சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 300 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜா எல, வத்தளை, கந்தானை மற்றும் ராகம பகுதிகளை மையமாக கொண்டு வாகனங்களை சோதனையிடும் விசேட சுற்றிவளைப்பும் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கந்தானை, ஜாஎல, வத்தளை மற்றும் ராகம ஆகிய பகுதிகளை மையமாக கொண்டு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்காலங்களில் இவ்வாறான சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை நாடுமுழுவதும் முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும்,
குறித்த சோதனை நடவடிக்கைககளுக்காக தேவையான உதவிகளை வழங்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற
அலுவல்கள் அமைச்சு பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.