
ஷேக் ஹசீனாவுக்கு 06 மாத சிறைத் தண்டனை
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 06 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது.
நீதிமன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் செயற்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் பங்களாதேஷில் திடீரென மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஆளுங்கட்சிக்கு எதிரான போராட்டம் வன்முறையாக வெடித்தது.
பின்னர் மாணவர்கள், ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என தெரிவித்து பிரதமர் மாளிகையையும் முற்றுகையிட்டனர்.
இதனால் பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேறி, ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து பங்களாதேஷில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியா திரும்பிய ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES உலகம்
