சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்தது

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நாட்டிற்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,168,044 ஆக பதிவாகியுள்ளதென சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜூன் மாதத்தில் மாத்திரம், 138,241 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் ஜூன் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 21.8% அதிகரித்துள்ளது.
ஜூன் மாதத்திலும் வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியா தொடர்ந்தும்
முன்னிலை வகிக்கின்றது.
இதன்படி, இந்தியாவிலிருந்து 37,934 பேர் ஜூன் மாதத்தில் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளனர்.
இதேவேளை, இங்கிலாந்திலிருந்து 11,628 சுற்றுலாப் பயணிகளும் சீனாவிலிருந்து 8,804 பேரும் வருகைத் தந்துள்ளனர்.
அத்துடன் அவுஸ்திரேலியாவிலிருந்து 7,299 பேரும் பாகிஸ்தானிலிருந்த 6,833 சுற்றுலாப் பயணிகளும்
வருகைத் தந்துள்ளனர்.
மேலும் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 241,994 சுற்றுலாப் பயணிகள் வருகைத்தந்துள்ளதுடன் ரஷ்யா மற்றும் இங்கிலாந்திலிருந்து வருகைத்தந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்தது.