இன்று முதல் டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்

இன்று முதல் டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்

டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைத்தப்படவுள்ளது.

16 மாவட்டங்களை இலக்காக கொண்டு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுமென சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 27932 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் 16 டெங்கு பேர் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This