கதிர்காம நகரில் பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் பயன்படுத்திய கடைகள் மீது சட்ட நடவடிக்கை

கதிர்காமம் புனித நகரத்தில் பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் பயன்படுத்திய கடைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மே மாதம் 31 ஆம் திகதி முதல் தற்போது வரை நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 32 கடைகள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனை நடவடிக்கைகளுக்காக 05 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் 75 கடைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும்
மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அவற்றில் பொலிதீன் மாலைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது.