
மின்சார தாக்குதலுக்கு இலக்கான சிறுமி பலி
மதவாச்சிபொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மின்சார தாக்குதலுக்கு இலக்கான 08 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சங்கிலிகந்தராவ பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (27.06) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுமி மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் நீர் சூடாக்கியை (Heater) பயன்படுத்திய போது மின்சாரம் தாக்கியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், சிறுமியின் சடலம் மதவாச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
CATEGORIES இலங்கை
