நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை பிரதேச செயலகத்திற்கு 02 ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு இன்று சனிக்கிழமை மாலை 6:00 மணி வரை செல்லுபடியாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார்.

மேலும், பதுளை மாவட்டத்தில் எல்ல, பசறை மற்றும் ஹாலியெல, கண்டி மாவட்டத்தில் மெத தும்பற ஆகிய பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share This