கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

கைதுசெய்யப்பட்ட கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி முன்வைத்த விடயங்களை கவனத்திற்கொண்ட நீதவான் சந்தேக நபரை 05 மில்லியன் ரூபா பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார்.

கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பிலான விசாரணைகளுக்கமைய அவர் இன்று கைதுசெய்யப்பட்டார்.

 

CATEGORIES
TAGS
Share This